கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கு, டிசம்பரில் தேர்தல்
கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களையே டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சிக் காலம் நிறைவடையும் 03 மாகாண சபைகளுக்கே இவ்வாறு தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளதன.
இந்த நிலையில், மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த பின்னர், தேர்தலை நடத்தாமல் மாகாண சபையின் ஆட்சிக் காலத்தை நீடிப்பதாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் எக்காரணம் கொண்டும் மாகாண சபைக்கான ஆட்சிக் காலம் முடிவடைந்த பின்னர் தேர்தல் பிற்போடப்பட மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.