மாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு

– பாறுக் ஷிஹான் –
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் – புதிய மாகாண அலுவலகத்தில், சம்பிரதாயபூர்வ பால்பொங்கல் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.
இதுவரை, யாழ்ப்பாணம் கைதடியில் இயங்கி வந்த – மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகமானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், புதிய அலுவலகத்தில் பணிகளை தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், நேற்று புதன்கிழமை – புதிய அலுவலகத்தில், சம்பிரதாயபூர்வ பால்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி. பெலிசியன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி. சிவராசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
