மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு; நள்ளிரவில் நாசகாரச் செயல்

🕔 February 18, 2017

Bike - 021– க. கிஷாந்தன் –

வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை (ஸ்கூட்டி) இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவமொன்று, ஹட்டன் – ஆரியகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் – ஆரியகம பகுதியில் வசிக்கும் நதுன் சமீர என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குறித்த நபரின் மோட்டர் சைக்கிளே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிள் எரியும் வெளிச்சத்தினைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதிலும், மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

அத்தோடு தீயினால் குறித்த நபரின் கடையின் ஒரு பகுதியும் சிறிதளவு சேதமாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்