சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை

🕔 February 14, 2017

Sasikala - 011மிழகத்தின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா உள்ளிட்டோரை, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 கோடி ரூபா அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் – மரணமடைந்ததையடுத்து, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூர் நீதிமன்றத்தில்  உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், சசிகலாவிற்கு பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்