முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு, ராணுவத்தினர் கணிணி அன்பளிப்பு
🕔 February 13, 2017



புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னர், சமூகத்துடன் இணைந்துள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருக்கு, ராணுவத்தின் மகளிர் படையணியினரால் கணிணி தொகுதி ஒன்றுன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய மயிலிட்டியில் அமைந்துள்ள 07வது மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கீதிகா ரங்கோட்டே இந்தக் கணிணித்ட தொகுதியினை வழங்கி வைத்தார்.
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட மேற்படி பெண், தமது வாழ்வாதரத்துக்காக வீட்டுடன் இணைந்து சிறு கடை ஒன்றினை நடத்தி வருவதுடன் பகுதி நேர ஊடகப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு எழுதி வருவதனை கருத்திற்கொண்ட படையினர், இணையத்தள வசதியுடன் கூடிய கணிணி தொகுதியினை அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

Comments

