மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம்

🕔 January 31, 2017

Muzammil - 01லேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஏ. ஜே.எம். முஸம்மில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பொருட், நேற்று திங்கட்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில், மலேசியாவுக்கான இலங்கைக்கான தூதுவராக இதுவரை காலமும் பணியாற்றிய, இப்றாகிம் அன்சார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மிக விரைவில்  மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக முஸம்மில் பொறுப்பேற்றுக் கொள்வார் என, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்