மது போத்தல் அலுவலகம்!

🕔 July 7, 2015

Glass bottle - lee - 01
பி
யர் போத்தல்களை வைத்து – சீன கட்டிட வடிவமைப்பாளரான லீ ரோங்ஜுன்  என்பவர், ஆச்சரியப்படத்தக்க அலுவலகமொன்றினை உருவாக்கியுள்ளார்.

08 ஆயிரத்து 500 பியர் போத்தல்களைக் கொண்டு, 300 சதுர அடி கொண்ட – மேற்படி அலுவலகக் கட்டிடத்தை, லீயும் அவரது தந்தையும் இணைந்து 04 மாதங்களில் நிர்மாணித்துள்ளனர்.

இதன்போது, போத்தல்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்புவதற்காக, கற்களையும் சீமெந்தினையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ் அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை நாணயத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் (சீன நாணயப் பெறுமதியில் 70 ஆயிரம் யுவான்) செலவாகியுள்ளது.

மேற்படி வடிவமைப்புக் கலைஞரான லீ – மொங்கோலிய பல்கலைக்கழகத்தில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் – மின்சார விளக்குகளின் வெளிச்சத்தால், போத்தல் கட்டிடம்  ஜொலிப்பதாகக் கூறி மகிழும் லீ, இந்த போத்தல் கட்டிடத்தால் – தனது வடிவமைப்புத் தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். Glass bottle - lee - 04Glass bottle - lee - 02Glass bottle - lee - 03Glass bottle - lee - 05

Comments

புதிது பேஸ்புக் பக்கம்