கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு

🕔 January 11, 2017

farewell-022– யூ.கே. காலித்தீன் –

ம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமை புரிந்து 2016ம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றிய அனைத்து உத்தியோத்தர்களையும் பாராட்டும் வகையிலும், இவ்வாண்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில், ‘பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல்’ நிகழ்வு, நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட காரியலத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, கட்டடங்கள், கிராமிய கைத்தொழில், போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில், சட்டம், ஒழுங்குகள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி வண்ணியசிங்க, கிராம அபிவிருத்தி திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா மற்றும் அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகப் பங்கேற்றிருந்தனர்.farewell-033 farewell-011

Comments