அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு

🕔 December 29, 2016

sasikala-011மிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எனப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் சசிகலாவிடம் வழங்கினர். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலாவை இதன்போது சந்தித்தனர்.

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தொடர்பில் பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், அ.தி.மு.க.வில் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு, அவர்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments