வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம்

🕔 December 17, 2016
accident-chavakatcheri-022– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பானணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை  மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேனும், யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயரிழந்துள்ளனர்.   உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வேனில் பயணித்த மூன்றுபேர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில்  பயணித்த  17 பேர் வியத்தில் காயமடைந்துள்ளனர்.
accident-chavakatcheri-033
accident-chavakatcheri-011

Comments