நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றிய தகவல் வெளியீடு; நுகேகொடயில் அதிக குற்றம்

🕔 December 16, 2016

crime-011நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களிலும், ஆண்டின் ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரையி­லான காலப்­ப­கு­தியில்  7592 பாரிய குற்றச் செயல்கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக  பொலிஸ் தலை­மை­யகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலை­மை­யகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மாத்­திரம் பாரிய குற்­றச்­செ­யல்கள் 575 பதி­வா­கி­யுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மனி­தப்­ ப­டு­கொலை சம்­ப­வங்கள் 39, பாலியல் குற்றங்கள் 198, வீடு­களை உடைத்தல் 153, கொள்ளைச் சம்­ப­வங்கள் 64 மற்றும் திருட்டுச் சம்­ப­வங்கள் 121 ஆகியவை பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் 90 குற்றச்செயல்கள் குறை­வ­டைந்­துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதி­வான பாரிய குற்றச் செயல்­களில் அதிகளவானவை மேல் மாகா­ணத்தில் பதிவா­கியுள்ளன. அவற் றின் எண்­ணிக்கை 170 ஆகும். மேல் மாகா­ணத்தில் நுகே­கொட தொகு­தி­யி­லேயே அதி­க­ள­வான குற்றச் செயல்கள் பதி­வா­கி­யுள்­ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்