எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு

🕔 December 15, 2016

Faizer musthafa - 011ள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடைபெறும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்; எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றார். மேலும், எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி அல்லது 31ம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் என்றார்.

தேர்தல் நடத்தப்படாமைக்கு தான்தான் காரணம் என சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும், உண்மையில் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமும் தேவையும் கிடையாது என’வும் அவர் தெரிவித்தார்.

ஒருவர் மீது குற்றம் சுமத்துவது இலகுவானது என்ற போதிலும் அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வது கடினமானது என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்