திடீர் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, விமான சேவை

🕔 December 10, 2016

Rajitha - 344நோயாளர்களை விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு யோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

திடீர் விபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் நோயாளர்களே, இவ்வாறு விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

குறித்த யோசனையை பொருளாதார குழுவுக்கு – தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் விபத்து மற்றும் திடீர் பரிகாரம் தொடர்பிலான தேசிய கொள்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Comments