73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார்

🕔 December 10, 2016

73-year-woman-011.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 73 வயது மூதாட்டியொருவர் தோற்றினார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை இவர் எழுதினார்.

நடுகல – மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த சதொச நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான என்.எச்.எஸ். கல்யாணி என்பவரே இவ்வாறு மேற்படி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் தனது அறிவை விருத்தி செய்யும் நோக்கிலேயே, தான் – இந்தப் பாடத்துக்குரிய பரீட்சக்குத் தோற்றியதாக, மேற்படி மூதாட்டி தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், குறித்த பாடத்துக்குரிய பரீட்சை கஸ்டமாக இருந்ததாகவும் கூறினார்.

இதேவேளை, அடுத்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்யில் ஹிந்திப் பாடம் உட்பட, இரண்டு பாடங்களை எழுதுவதற்கு – தான் எண்ணியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வயதில் எந்தவொரு தொழிலையும் எதிர்பார்த்து, தான் இந்தப் பரீட்சையில் தோற்றவில்லை எனத் தெரிவித்த மேற்படி மூதாட்டி, தனது அறிவை விருத்தி செய்வதற்காகவே இவ்வாறு பரீட்சையில் தோற்றியதாகவும் கூறினார்.

Comments