ஞானசார மற்றும் சுமனரத்ன தேரர்களை கைது செய்யுமாறு ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்

இதற்கு மறுப்பளித்து உரையாற்றிய நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இந்த விடயம் தொடர்பில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தொடர்ந்தும் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்;
“ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை நாங்கள் வரவேற்கின்றோம். நீங்கள் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால், இந்த கலந்துரையாடலின் பின்பும் முஸ்லிம்களை மனவேதனைக்கு உட்படுத்தும் வகையில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உரையாற்றியுள்ளார்.
அவ்வாறாயின் இந்த கலந்துரையாடலில் என்ன பயன். ஆகவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். நீங்கள் நீதி அமைச்சர் இதனைக்கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றார்.