பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கமரா பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஹலீமிடம் றிசாட் கோரிக்கை

🕔 December 8, 2016

rishad-011நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை அடையாளம் காணுவதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடை முறைப்படுத்துவதற்கு நம்மாலும் உதவ முடியும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இரவு வேளைகளிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெறுவதனால் கண்காணிப்புக் கமராக்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அறிந்து கொள்வதற்கு பொலிசாருக்கும் இது உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களையும், சகோதர சிங்கள மக்களையும் முட்டி மோத வைத்து அதன் மூலம் ஆதாயம்பெற சில சக்திகள் தற்போது முயற்சித்துவருவதாகவும் இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக

செயற்பட வேண்டியதன் அவசியத்தை, உலமாக்கள் மூலம் வலியுறுத்துவதற்கு முஸ்லிம் சமைய விவகார அமைச்சு சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹலீமிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்