ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி

🕔 December 2, 2016

mahindananda-aluthgamage-014ல்லாட்சி என்பது – வெட்கமில்லாத ஆட்சியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை. நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;

“நல்லாட்சி, நல்லாட்சி என மார்தட்டிக்கொள்கின்றீர்கள். ஆனாலும் வெட்கம் இல்லாத நல்லாட்சியே இதுவாகும்.

பொலிஸ்மா அதிபர் மேலிடத்தின் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை விடுதலை செய்வார். அதே போன்று பொய்யான பல குற்றச் சாட்டுகளை எம்மீது சுமத்தி சிறையில் அடைக்கவும் துணிந்து விடுவார்.

அப்படி குற்றம் சுமத்தி எம்மை சிறையில் அடைத்தாலும் எமக்கு கவலை இல்லை. எதற்கும் நாம் அச்சமடைய போவதில்லை.

நல்லாட்சியின் ஆடைகளை களையும் முகமாக பொலிஸ்மா அதிபர் செயற்பட்டு வருகின்றார். இதுவா பொலிஸ் மா அதிபரின் சேவை?

ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார்.. சேர்… இப்படி சேர் போடும் நல்லாட்சியின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் பொலிஸ் மா அதிபரே இப்போது பதவில் உள்ளார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்