1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது

🕔 November 27, 2016

vehicle-011– க. கிஷாந்தன் –

சுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா ரிகாடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று சனிக்கிழமை மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை பகுதியிலிருந்து – மஸ்கெலியா கிலண்டில் தோட்ட களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லும் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலை தூளையும், வாகனத்தையும், கைதான சந்தேக நபர்களையும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு, எதிர்வரும் 30ஆம்அ திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்