பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு

🕔 November 26, 2016

saleem-0123– யூ.கே. காலிதீன் –

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையினையிட்டு, அவரை பாராட்டி கௌவிக்கும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

மேற்படி பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். சதாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சமூக ஜோதி எனும் பட்டம் வழங்கி, பிரதேச செயலாளர் சலீம் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி யூ.எல்.எம். காஸிம், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தக்வா ஜும்ஆ பள்ளிவாசல்களின் மரைக்காயர்மார்களான ஏ.எல். அப்துல் ரஹீம், ஏ. மன்சூர், யூ.கே. சுவைஹிர், எம்.எம்.எம். சமூன் மற்றும் அட்டாளைச்சேனை சர்க்கியா அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எம். சலீம் (சர்க்கி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்