ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார்

🕔 November 23, 2016
naseer-0112– சப்னி அஹமட் –

கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 33 வைத்தியர்களுக்கு இன்று புதன்கிழமை நியமனம் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயுர்வேத வைத்தியர்கள் 17 பேருக்கும்,  02 பேருக்கு சித்த வைத்தியத்துறையிலும் 14 யுனானி வைத்தியர்களுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை, கல்முனை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் மற்றும் ஆயுர்வேத திணைக்களக்கள ஆணையாளர் திருமதி சிறிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.naseer-0114 naseer-0113

Comments