நீருக்கான கட்டணம் எக்கச்சக்கமாய் அதிகரிப்பு; மக்கள் வயிற்றில் அடிக்கிறார் ஹக்கீம்

🕔 November 12, 2016

water-087நீருக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நீர்க் கட்டணங்கள் மட்டுன்றி, மாதாந்த சேவைக் கட்டணங்களும் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.

சில பிரிவுகளில் சுமார் 30 வீதம் முதல் 50 வீதம் வரையில் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.

சமுர்த்தி பெறுநர்கள் தவிர்ந்த ஏனைய பாவனையாளர்கள் 0 முதல் 5 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாவிலிருந்து 16 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதுடன், மாதாந்த சேவைக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 250 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.

16 அலகு முதல் 20 அலகு வரையிலான அலகுகளுக்கான கட்டணங்கள் 40 ரூபாவிலிருந்து 52 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதுடன், 80 ரூபாவாக காணப்பட்ட மாதாந்த சேவைக் கட்டணம் 400 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கான 0 முதல் 5 அலகுகளுக்குரிய மாதாந்த சேவைக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக உயர்த்தப்படுகிறது. அலகு ஒன்றுக்கான கட்டணம் 6 ரூபாவிலிருந்து 7 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

நான்கு ஆண்டுகளின் பின்னர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பாவனையாளாகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அமைச்சின் கீழ், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்