மஹிந்தவின் அலுவலகம், வாடகைக்கு

🕔 November 7, 2016

Mahinda - 0134னது அலுவலகத்தின் ஓர் அறையினை வாடகைக்குக் கொடுத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, மேற்கண்ட தகவலை மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜி.எல். பீரிஸ் தலைமையில் உருவாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் கட்சியினருக்கே, தனது அலுவலகத்தின் அறையொன்றினை இவ்வாறு வாடகைக்குக் கொடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்த அரசாங்கத்துக்கு எதிராக, எந்தவொரு எதிர்க் கட்சி வந்தாலும், அதற்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் முன்வருவோம். புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிரானது. அதற்கு நாம் ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

“புதிய கட்சிக்கு நாம் உதவத் தேவையில்லை. அக்கட்சி எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். நான் இன்னும் அக்காரியாலயத்துக்கு செல்லவில்லை” எனவும்  அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்