புகழ்பெற்ற இசைக் கலைஞர் அமரதேவா மரணம்

🕔 November 3, 2016

amaradeva-098லங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பண்டித் டபிள்யூ. டி. அமரதேவா தனது 88ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார்.

மாரடைப்பு காரணமாக  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னகுவத்த வடுகே டொன் அல்பேர்ட் பெரேரா எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், அமரதேவ என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி வந்தார்.

05 டிசம்பர் 1927 ஆம் ஆண்டு, கொரல்வெல்ல – மொரட்டுவ பிரதேசத்தில் இவர் பிறந்தார்.

இந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்ற அமரதேவவுக்கு இந்திய அரசின் கௌரவ உயர் பத்மசிறி விருது 2002ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு அவர் பிலிப்பைன்ஸ் மெக்சைசே விருதையும் அவர் பெற்றுக்கொண்டார்.

மாலைத்தீவு நாட்டின் தேசிய கீதத்துக்கு அமரதேவவே இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்