இறக்காமம் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம்: பின்னணியில் அமைச்சர் தயாகமகே?

🕔 October 29, 2016

irakkamam-0412111– முன்ஸிப் அஹமட் –

றக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில் இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டமையின் பின்னணியில், அமைச்சர் தயாகமகேயின் ஆதரவு உள்ளதாக அறிய முடிகிறது.

புத்தர் சிலையை நிறுவுவதற்கான வந்தர்கள், தாம் – அமைச்சர் தயாகமகேயின் ஆட்கள் என தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, புத்தர் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சீருடையுடன் அதிகளவு பொலிஸார் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பௌத்தர் ஒருவர் கூட வசிக்காத இந்தப் பகுதியில், புத்தர் சிலையொன்றினை நிறுவ வேண்டிய தேவை எதுவும் இல்லை என, இறக்காமம் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மேலும், குறித்த சிலை நிறுவப்பட்டுள்ள பகுதியானது தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்படி புத்தர் சிலையை நிறுவும் பொருட்டு, இறக்காமல் பிரதேச செயலாளரிடம் சிலர் அனுமதி கோரி வந்ததாகவும், பிரதேச செயலாளர் அனுமதி மறுத்திருந்த நிலையிலேயே, இன்றைய தினம் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

தொடர்பான செய்தி: இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்

irakkamam-00002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்