விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு

🕔 October 28, 2016

wimalwife-098நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன், இயற்கையா மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் மர்மமான முறையில் விமல் வீரவன்சவின் மகனின் நண்பர் விமல் வீரவன்சவின் வீட்டில் உயிரிழந்தார். இது தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த அறிக்கையின் படி, குறித்த மரணம் இயற்கையானது அல்ல எனவும், மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேலதிக விசாரணைக்காக சடலத்தின் பாகங்களை அரசாங்க ரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்கு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தன வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி பீ.டீ. கலகெதர சடலத்தைப் பரிசோதித்தார். சடலத்தின் மூக்கில் இருந்து இரத்தம் வந்துள்ளதாகவும், அதனை யாரோ ஒருவர் துடைத்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாயில் சளியுடனான திரவம் ஒன்று வெளியேறியுள்ளதாகவும், வித்தியாசமான முறையில் உதடுகள் உலர்வடைந்துள்ளதனை கண்கானித்த மரண விசாரணை அதிகாரி, சடலத்தின் கழுத்தின் வலது பக்கத்திலும், பின் பகுதி தோள்பட்டையிலும், வயிற்றின் இரண்டு பகுதிகளிலும் நீல நிறத்திலான தாக்கப்பட்ட தழும்புகளும் காணப்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் மேற்படி 24 வயதுடைய இளைஞன் மரணமடைந்ததாகக் தெரிவித்து, விமல் வீரவன்சவின் மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்