மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு

🕔 October 27, 2016

arjun-mahendran-01787லங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், நாட்டிலிருந்து சென்று விட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறினார்.

மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு தொடர்பான கோப் குழுவின் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்