உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

🕔 June 26, 2015
Kathankudi - Hisbullah - 01– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு மாதாந்தம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கும் திட்டமொன்றினை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனமும் – லண்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து இந்தத் திட்டத்தினை செயற்படுத்துகின்றன.

புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயல் முன்றலில் – நேற்று வியாழக்கிழமை பிற்பகல், மேற்படி மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளர்களுக்கு 07 ஆயிரத்து 500 ரூபயாய் வீதம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

அப்ரார் பள்ளிவாயல் செயலாளர் எம்.எஸ்.எம். றாஸிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கினார்.Kathankudi - Hisbullah - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்