10 ஆயிரம் பேஸ்புக் விருப்பங்கள்: கடந்தது புதிது

🕔 October 11, 2016

0000-likes-011
பு
திது செய்தித்தளத்தினை பேஸ்புக் பக்கத்தினூடாகத் தொடரும் வாசகர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தினைக் கடந்துள்ளது.

புதிது செய்தித்தளம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் இந்த நிலையினை எட்டியுள்ளமை சந்தோசத்துக்குரிய விடயமாகும்.

பரபரப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவும், வாசகர்களின் கவனத்தினைப் பெற வேண்டும் என்பதற்காகவும் பத்தாம் பசலித்தனமான செய்திகளை ஒருபோதும் புதிது செய்தித்தளம் வழங்கியதில்லை என்கிற ஆத்ம திருப்தி, அதன் ஆசிரியர் பீடத்துக்கு உண்டு.

நியாயத்தை வெளிக் கொணர்வதற்காக, எதற்கும் அஞ்சாமல் உரத்துக் குரல் கொடுப்பதுதான் புதிது செய்தித்தளத்தின் இலக்காகும்.

அதற்காகவே, உண்மையின் குரல் என்று, புதிது செய்தித்தளத்தினை அடையாளப்படுத்தியுள்ளோம்.

புதிது செய்தித்தளத்தினை நம்பிக்கையோடு தொடருங்கள்.

பேஸ்புக்கில் 10 ஆயிரம் விருப்புக்களைத் தாண்டச் செய்த வாசகர்களுக்கு நன்றிகள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்