மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார்
🕔 October 10, 2016


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வில், அவர் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவத்தினரின் நினைவாக மேற்படி தூபி நிர்மாணிக்கப்படவுள்ளது.
மேலும், அங்கு நடைபெறவுள்ள ஆசிர்வாத பூஜையிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்
மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மஹிந்த கலந்துகொள்ளும் விகாரை நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇ.
மஹிந்த ராஜபக்ஷவின் வருகையைத் தெரிவிக்கும் வகையிலான சுவரொட்டிகளும், பௌத்த கொடி அலங்காரங்களும் நகரின் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Comments

