சமஷ்டியை சுதந்திரக் கட்சி ஏற்காது; ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவே: அமைச்சர் திஸாநாயக்க

🕔 October 8, 2016

SB. Disanayaka - 086ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சமஷ்­டியை ஒரு­போதும் ஏற்­காது ஏற்­காது என்று அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்துள்ளார்.

ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லான இலங்­கைக்குள், சக­ல­ருக்கும் நீதி­யான வகையில் தீர்வினை வழங்குவதாகவே, புதிய அர­சி­ய­ல­மைப்பு  அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக வலு­வூட்டல் மற்­றும் நல­னோம்­புகை அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரையாற்­றியபோதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“தெற்கில் இன­வா­தி­களும் கோத்­தி­ர­வா­தி­களும் இணைந்து வடக்கில் சமஷ்டி உதயமாக போகின்­ற­தா­கவும், அதற்கு நல்லாட்சி அர­சாங்கம் துணை போகின்­றது என்றும் பொய் யான விட­யங்­களை சிங்­கள பௌத்த மக்­க­ளி­டத்தில் பரப்பி இன­வாத தூண்­டு­தல்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்பானது, ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லான இலங்கைக்குள், சக­ல­ருக்கும் நீதி­யான வகையில் தீர்வினை வழங்குவதாக அமையும். எனவே அரசின் பல­மான பங்­கா­ளி­யான சுதந்­திர கட்சி சமஷ்­டியை ஒரு­போதும் ஏற்காது.

அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பிலும் எதிர்­த்தரப்புகள் பல­வி­த­மாக விமர்­சிக்­கின்­றன. இந்த அர­சாங்கம் சமஷ்டி ஆட்­சியை வழங்­கப்­போ­கின்­றது, ஈழத்­துக்கான சகல ஏற்­பா­டு­களும் நிறைவு பெற்­றுள்­ளன, நாடு துண்டு துண்­டு­க­ளாக பிள­வுப்­ப­டுத்­த­பட போகின்­றது, அர­சி­ய­ல­மைப்பில் தற்­போது வரை­யுள்ள பௌத்த மதத்தின் தனித்­துவ தன்மை இல்­லாது செய்­யப்­பட போகின்­றது.என்ற வகையில் உண்­மைக்கு புறம்­பான பல விமர்­ச­னங்­களை முன்வைக்கின்றனர்.  இது இந்த நாட்டின் சிங்­கள பௌத்த மக்­க­ளி­டத்தில் இன­வாத தூண்டுதல்­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பாடு என்­பதை அர­சாங்கம் நன்­றாக விளங்கிக் கொண்­டுள்­ளது.

இதனால் தெற்கின் இன­வா­திகள் தம்மை வலுப்­ப­டுத்­திக்­கொண்டு, குறு­கிய அர­சியல் நோக்­கங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முனை­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் வடக்கு முத­ல­மைச்சர் இந்த இன­வாத தீயை மேலும் எரியச் செய்யும் வகை­யி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

இவற்றின் மத்­தியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த போது, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­க­ளையும் வடக்கு முதல்­வ­ரையும் அருகில் வைத்­துக்­கொண்டு மாகா­ணங்­களை பகிர்­வதில் தமக்கு ஒரு­போதும் உடன்பா­டில்லை என்றும், பிரித்­தா­னி­யர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பிள­வுக்கும் நாங்கள் முரண்­பட வேண்­டி­யதும் இல்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். எனவே இலங்கை ஒரு ஒற்­றை­யாட்சி நாடு என்ற தனித்­தன்­மையை நாம் தொடர்ந்தும் பேணுவோம் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தற்­போதும் சிலர் இலங்­கையின் ஒற்­றை­யாட்சி தன்­மையில் வேறு­பா­டுகள் ஏற்­படும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளனர். ஆனால் ஒரு­போதும் சமஷ்டி ஆட்­சிக்கு இலங்கையில் இட­மில்லை என்ற நிலைப்­பாட்டில் சுதந்­திர கட்சி உறு­தி­யாக உள்­ளது. இந்த நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் உறு­தி­யா­க­வுள்ளார்.

அதே­நேரம் அவர் ஒரு இன­வா­தியும் அல்லர். அதனால் பௌத்த மதம் மற்றும் ஏனைய மதங்­களின் தனித்­தன்­மையும் பாது­காக்­கப்­படும் என்­ப­திலும் சந்­தேகம் இல்லை. தற்போது வடக்கு முதல்வர் சீ.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் இன­வாத செயற்­பா­டுகள் இல்லை என்று கூறி­யுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஷிந்த ராஜபக்ஷவுக்கு, சில தினங்­க­ளுக்கு முன்பு வடக்கு முதல்­வரின் செயற்­பா­டுகள் பிரபாரனின் செயற்­பா­டு­க­ளா­கவும் அவரின் கோரிக்­கைகள் பிர­பா­க­ரனின் கோரிக்கை­க­ளா­கவும் தெரிந்­தன.

ஆனால் தற்­போது அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரும் நல்­லி­ணக்கச் செயற்­ திட்டங்களுக்கு மத்­தியில், வடக்கு முதல்வர் சீ.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் இனவாதமானது சந்­தர்ப்­ப­வாத அர­சியல் லாபத்தை ஈட்­டிக்­கொள்­வ­தற்­கான செயற்பாடாகவே உள்ளது. அவரின் கருத்துக்கள் அவ்வாறே அமைந்துள்ளன.

எவ்வாறாயினும் அவர் சிரேஷ்ட நீதியரசர், சட்ட வல்லுனர் என்றாலும், அரசியல் விவகாரங்களில் முதிர்ச்சியற்றவர் என்பதை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் தமக்கு அரசியல் முதிர்ச்சியோ அல்லது அரசியல் தொடர்பில் நீண்ட அனுபவங்களோ இல்லை என்பதை உறுப்படுத்தியுள்ளார் என்பதே எமது நிலைப்பாடாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்