சர்வதேச மிளகு மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழு, சீனா பயணம்

🕔 June 25, 2015

International Conference - 01– ஏ.எச்.எம். பூமுதீன் –

சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக, உத்தியோகபூர்வ வர்த்தக குழுவொன்று – நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை, சீனா பயணமாகியதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் தெரிவித்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் – இலங்கையின் மிளகு மற்றும் வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியாளர்கள் பங்குபற்றுவதாகவும் மரைக்கார் கூறினார்.

சீனாவில் நடைபெறும் வாசனைத் திரவியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக, சென்றுள்ள குழுவினர் – மாறுபட்ட சந்தை வாய்ப்புக்களை பற்றி கண்டறியவும், தெற்கிழக்காசிய நாடுகளின் ஏற்றுமதி வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளவுள்ளனர்.

மிளகு உற்பத்தி வேலைத்திட்டம் மற்றும் சந்தை விரிவாக்கத்துக்காக, துறைசார்ந்தோருக்கு ஒத்தாசையாகத் திகழ்வதே – ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெறும் – சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்கும் வாசனைத் திரவியத்துறைசார் பிரதிநிதிகளுடான கூட்டம், அண்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 10க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களைச் சேர்ந்த – பிரபல வர்த்தக பிரதிநிதிகள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக யூசுப் மரைக்கார் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்