மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய

🕔 September 25, 2016

sanath-jayasuriya-066
ட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய, பாடசாலைச் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜயசூரிய கல்வி கற்ற மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில், பழைய மாணவர்களுக்கான நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொள்ளச் சென்றபோது, சனத் ஜயசூரிய, வெள்ளை நிற சேட் மற்றும், நீல நிற அரைக் காற்சற்டை அணிந்து, புத்தகப் பையினை முதுகில் சுமந்தவாறு, தனது பாடசாலைக்குச் சென்றிருந்தார்.

பாடசாலை சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பலரையும் ஜயசூரிய ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்