18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண்
மரபுணுக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய பெண்ணொருவர், 144 வயது கொண்ட மூதாட்டியின் தோற்றத்தில் காணப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரொச்செல் பாண்டேர் (Ana Rochelle Pondare) எனும் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக – இவர் அடையாளம் பெற்றுள்ளார்.
முதிரா முதுமை (Progeria) எனும் மரபணு நோயினால் அனா ரோச்செல் பாதிக்பட்டுள்ளார். இது மிகவும் அரிதானதொரு நோயாகும். இந்த மரபணு நோயினால் 23 நாடுகளைச் சேர்ந்த 45 பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அனா ரோச்செல்லும் ஒருவராவார்.
அனா ரொச்செல் 30 மே 1997 இல் பிறந்தார். இவருக்கு இவ்வாறானதொரு நோய் உள்ளமைக்கான அடையாளங்கள், அவரின் 05 ஆவது வயதில் வெளிப்பட்டதெனக் கூறப்படுகிறது.
இவருக்கு, சாதாரண மனிதர்களின் வளர்ச்சியை விடவும் 10 மடங்கு வளர்ச்சி அதிகமாக உள்ளது. அனா ரோச்செல்லின் பற்கள் விழுந்து, முகம் சுருங்கி, குறுகிய உருவமாக மாறிவிட்டார்.
இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் இந்த நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனமொன்றின் தகவல்களின் படி, முதிரா முதுமை (Progeria) எனும் மரபணு நோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் 14 வயதுக்குள் மரணித்து விடுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அனா ரொச்செல் தற்போத 18 வயதை அடைந்துள்ளார். இது மகிழ்சி தரும் விடயமாகும். இருந்தபோதும் – அதிகளவில் முடி கொட்டுதல், தோல் சுருக்கமடைதல் போன்ற பிரச்சினைகளை, அனா – அதிகளவில் எதிர்கொண்டு வருகிறார்.
அனா ரொச்செல், அண்மையில் 18 ஆவது வயதையடைந்தார். இதனையடுத்து, அவரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். அனாவுக்குப் பிடித்த தொலைக்காட்சிப் பிரபலமான சாரா ஜெரோனிமோவை வரவழைத்தார்கள். மூன்று வெவ்வேறு வித ஆடைகளில் தோன்றிய அனா, தனது பிறந்தநாளை மகிழ்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாடினார்.