மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது

🕔 September 5, 2016

IGP - Malasia - 011லேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் ஐவரை மலேசியா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களிடம் தற்போது, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் தன்ஸ்ரீ காலித் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு எதிராக, இலங்கைய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, எல்.ரி.ரி.ஈ. ஆதரவார்களாலேயே, தூதுவர் அன்சார் தாக்கப்பட்டிருந்தார்.

அன்சார் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலின் சிசிரிவி வீடியோ காட்டிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் மேற்கொள்ளப்படும் வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்