ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு

🕔 September 4, 2016

Book release - Mansoor - 01
– எம்.வை. அமீர் –

சிரிய ஆலோசகர் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ எனும் நூல் அறிமுகவிழா, அக்கரைப்பற்று ரி.எப்.சி. மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

ஐ.ஏ.எல்.எம். அக்கரைப்பற்று நிறுவனத்தின் தலைவர் முஹம்மத் ஆப்தீன் ஷிஹார்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ‘BCAS’ கம்பஸ் கல்விநிறுவனம் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் தலைவருமான  பொறியியலாளர் எம்.எம். அப்துர் றகுமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் நூலின் பிரதிகளையும் வழங்கிவைத்தார்.

முன்னாள் வலய கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீம், எஸ்.எல்.எம். ஹனீபா மதனி ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் ,வைத்திய அத்தியட்சகர் கே.எல். நக்பர் விரிவுரையாளர் ரி. கணேசரத்தினம், விமர்சகர் சிராஜ் மஷ்ஹுர், ஓய்வுநிலை கல்வி அதிகாரி என். சம்சுதீன்,  சுடர்ஒளி பத்திரிகையின் உயர் செயற்பாட்டாளர் ஜானதனன் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்..

இந்நிகழ்வின்போது மூத்த கல்வியலாளர்கள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, கல்வித்துறை சார்ந்த பல நூல்களையும், இலக்கிய நூல்கள் பலவற்றினையும் எஸ்.எல். மன்சூர் எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Book release - Mansoor - 02Book release - Mansoor - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்