கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ரணில்; வெலிமடையிலும் களமிறங்கினார்
🕔 August 27, 2016


– க. கிஷாந்தன் –
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெலிமடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, வெலிமடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் கலந்து கொண்டார்.
தொழில், தொழில் உறவுகள் ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதற் கட்டமாக விசேட கூட்டமொன்று வெலிமடை நகர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வெலிமடை நகரில் பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
டிஜிடல் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்ட மேற்படி பேரணியில், பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.

Comments

