மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு

🕔 August 25, 2016
Hisbullah - 097ட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை, முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR share center benchmarking நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜெஸ்பர் பாம் குயிட்ஸுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஹோட்டல் மற்றும் உல்லாசப் பயணத்துறைகள் தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குகின்ற, அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு பல நாடுகளில் இயங்குகின்ற  STR share center benchmarking நிறுவனத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் இணைந்து – இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு உல்லாசத்துறை,  ஹோட்டல்துறை மற்றும் கப்பல் வேலைகள் தொடர்பான விசேட பயிற்சி ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன்,  மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவுள்ள உல்லாசத்துறை தொடர்பான பீடத்தை, நவீன வசதிகள் கொண்டதாக அமைப்பது தொடர்பாகவும், சர்வதேச  STR share center benchmarking நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மட்டக்களப்பு கெம்பஸ் இயங்குவது தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை உல்லாச ஹோட்டல் கழகத்தின் தலைவர் டொக்டர் பிரபாத் உக்குவத்தவும் கலந்துகொண்டார்.

Comments