பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர்

– சப்னி அஹமட் –
பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்தெரிவித்தார்.
வாங்காமம் பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பிரினை திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஸ்ரப்பின்வி ருப்பத்திற்குரிய பிரதேசமாக வாங்காமம் இருந்தது. இப்பிரதேச மக்கள், தங்களின் நாளாந்த வாழ்க்கையிலும், மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் வாங்காமம் பிரதேசத்துக்கான நிரந்த வைத்திய சேவையை வழங்கக்கூடிய வகையில் வைத்தியசாலை இல்லாமல் இருந்தது. இதனையடுத்து தற்போதைய அரசின் மூலம் இந்த வைத்தியசாலையை இன்று திறந்து வைக்கின்றோம்” என்றார்.
இந்நிகழ்வில், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
