உசைன் போல்ட்; 200 மீற்றர் பந்தயத்திலும் தங்கம் வென்றார்

🕔 August 19, 2016

Usain bold - 099
லகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக் விழாவில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றி மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தினை உசைன் வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியிலும் உசைன் போல்ட் தங்கத்தை வென்றதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடச்சியாக மூன்று முறை 100 மீற்றர்ஓட்டப் பந்தயத்தில் தங்கத்தை வென்றவர் எனும் பெருமையினைப் பெற்றுள்ளார்.

200 மீற்றர் தூரத்தினை 19.78 செக்கன்களில் உசைன் ஓடிக் கடந்துள்ளார்.

இந்தப் போட்டியில் இரண்டாமிடத்தினை கனடா வீரர் அன்ரூ டி கிராஸ் 20.02 சென்கன்களிலும், மூன்றாமிடத்தினை பிரான்ஸ் வீரர் கிறிஸ்தோபர் லமைச்ச 20.12 சென்கன்களிலும் ஓடிக் கடந்து வென்றுள்ளனர்.Usain bold - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்