அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு

🕔 August 18, 2016

Dr. Nakfer - 02-றிசாத் ஏ காதர் –

வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்க்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார்.

இதற்கிணங்க, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், மேற்படி சேவை ஆரம்பமாகவுள்ளது. இவ் வைத்திய சேவையில் கொரிய நாட்டு வைத்தியர்களுடன், உள்நாட்டு வைத்தியர்கள் இணைந்து சிசிச்சைகளை வழங்கவுள்ளனர்.

இதேபோன்று – பொத்துவில், நிந்தவூர், மகாஓயா மற்றும் தெஹியத்தகண்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில், இந்த ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளன.

கண், காது, மூக்கு, சத்திரசிகிச்சை, அக்குபஞ்சர், பஞ்சகர்ம மற்றும் பொது வைத்தியத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள், இந்த சேவையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி வைத்திய சேவைகளுக்கு, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அனுசரணை வழங்குவதாக தெரிவித்த டொக்டர் நக்பர், அட்டாளைச்சேiயில் இடம்பெறவுள்ள வைத்திய சேவையானது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்