பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள்

🕔 August 16, 2016

Brilliant - 01234
ஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை முழுப் பணத்தினையும் ஒரேயடியாகச் செலுத்தி கொள்வனவு செய்கின்றவர்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்குரிய 07 லீட்டர் ஒயில் இலசமாக வழங்கப்படுகிறது.

இதேவேளை, மோட்டார் சைக்கிள்களை தவணை முறையில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்வோருக்கு, கொள்வனவு செய்யும் மோட்டார் சைக்கிளுக்குரிய காப்புறுதி மற்றும் பதிவுகள் இலவசமாகச் செய்து தரப்படுவதோடு, மோட்டார் சைக்கிளுக்கான 07 லீட்டர் ஒயில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு பஜார் முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்கின்றவர்களுக்கும் அதிசயிக்கத்தக்க சலுகைகளும், இலவசங்களும் வழங்கப்படுகின்றன.
முச்சக்கர வண்டிகளை ஒரே தடவையில் முழுப் பணத்தினையும் செலுத்தி கொள்வனவு செய்வோருக்கு, முச்சக்கர வண்டிக்குரிய 03 டயர்கள், மறைப்புத் திரைகள் ஆகியவற்றுடன் வேறு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தவணை முறையில் பணம் செலுத்தி முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வோருக்கு, இலவசமாக காப்புறுதி மற்றும் பதிவுகள் செய்து தரப்படுகின்றன. மேலும், முச்சக்கர வண்டிக்கான 05 டயர்கள், மறைப்புத் திரைகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, முச்சக்கர வண்டியியைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான செலவினையும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் இலவசமாக செய்து தருகின்றனர்.

இந்தச் சலுகைகளும், இலவசங்களும் குறிப்பிட்டதொரு காலத்துக்கு மாத்திரமே என்பதால், பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வோர் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தை நாடலாம்.

இதேவேளை, தமது நிறுவனத்தில் சுசுக்கி ரக கார்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்பதை பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.

தவணை முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது, இஸ்லாமிய அடிப்படையிலான திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.

இலக்கம் 142/2, பிரதான வீதி – அக்கரைப்பற்று எனும் முகவரியில், பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்