ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு

🕔 August 6, 2016

Olympics - Rio - 2016
பி
ரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று சனிக்கிழமை காலை வான வேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11,239 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

எதிர்வரும் 21ஆம் தேதி வரை – மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோசாவோ, தென் சூடான் அணிகள் முதன் தடவையாக, இம்முறை ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றன.

மொத்தம் 31 விளையாட்டுப் போட்டிகள் 41 பிரிவுகளில் நடைபெறுகின்றன. ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. 05 நகரங்களில் உள்ள 33 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியை சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரேசில் நடத்துகிறது.

தென் அமெரிக்க நாடொன்றில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதன்முறை. மேலும் போர்த்துக்சீய மொழி பேசும் நாட்டில் ஒலிம்பிக் நடத்தப்படுவதும் இதுவே முதன்முறையாகும்.

ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர், இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை கண்டுகளித்து வருகிறார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்