அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திப்பு
– வி.சுகிர்தகுமார் –
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பில், கிழக்கு மாகாணசபை தவிசாளரை, சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சந்திப்பு, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ. ஹரிகரன் தலைமையிலான குழுவினர், கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி உள்ளிட்ட அதிகாரிகளை இதன்போது சந்தித்து தமது பிரச்சினனைகள் குறித்து பேசவுள்ளனர்.
இக்கலந்துரையாடலின் பின்னர், கிழக்கு மாகாணசபை தவிசாளரினூடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு, தமது அமைப்பினருக்கு கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படுமென நம்புவதாவும் மேற்படி அமைப்பினர் தெரிவித்தனர்.
நாளைய சந்திப்பில், 300 க்கும் மேற்பட்ட தமிழ் பட்டதாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.