தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை

🕔 June 20, 2015

Ismail - VC - 01– எம்.வை. அமீர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைகின்றமையினை அடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் நடத்தப்பட்டது.

பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரியாவிடை நிகழ்வினை, பல்கலைக்கழக ஊழியர்களும், மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உபவேந்தராகப் பதவி வகித்த கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில், இரண்டு பதவிக் காலங்கள் கடமையாற்றியுள்ளார்.

மேற்படி பிரியாவிடை நிகழ்வில் –  பீடாதிபதிகள், உயர் நிர்வாக உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

இதன்போது, உபவேந்தர்  இஸ்மாயில் – நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்