துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல்

🕔 July 16, 2016

Turkey - 0555
து
ருக்கி ராணுவ சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

துருக்கியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்ததையடுத்து,  மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி அர்துகான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து ராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியதோடு, ராணுவ டாங்கிகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், துருக்கியில் எற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலரும்தான் காரணம் என்றும், அவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் – இஸ்தான்புல்லின் அட்டதுர்க் விமான நிலையம் வந்திறங்கிய துருக்கி அதிபர் எர்டோகன் கூறினார்.

இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட ராணுவப் புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சதிப்புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தினரை – மக்கள் பிடித்துத் தாக்கும் காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.Turkey - 0444 Turkey - 0333 Turkey - 0222 Turkey - 0111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்