அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

🕔 July 14, 2016

Foods - 0133சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் பற்றிய விபரங்கள், வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட  இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே. பீ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொருட்டகளின் கட்டுப்பாட்டு விலைகளின் விபரங்கள் வருமாறு;

கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா

கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா

சிவப்பு பருப்பு – 169 ரூபா

சீனி ஒரு கிலோகிராம் – 95 ரூபா

நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் – 495 ரூபா

நெத்தலி (டுபாய்) ஒரு கிலோகிராம் – 410 ரூபா

கடலை ஒரு கிலோகிராம் – 260 ரூபா

பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா

டின் மீன் – 140 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா

உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா

கோதுமை மா ஒரு கிலோகிராம் – 87 ரூபா

உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா

கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா

கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா

மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா

சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்