‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்

சில மாதங்களாக உடல்நல பாதிப்புக்குள்ளான நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த ராமதாஸ் – நேற்று மரணமானார்.
இலங்கை வானொலி வர்த்தகசேவையில் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதி, நடித்ததோடு, தயாரித்தும் வழங்கியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய ‘கோமாளிகள் கும்மாளம்’ என்ற பிரபலமான நாடகத்தொடரை இவரே எழுதியதோடு, ‘மரிக்கார்’ பாத்திரத்திலும் நடித்து அதையே தனது சிறப்பு பெயராகவும் கொண்டார்.
மேற்படி நாடகம், பின்னர் ‘கோமாளிகள்’ என்ற பெயரில் திரைப்படமாகியது.