பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம்

🕔 July 7, 2016

Sword  - 98– எப். முபாரக் –

தோப்பூர் ஆஸாத் நகரில், குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 03 பேர் கொண்ட குழுவினால், ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 06 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், கே.எம்.நாஸ்கீன் (வயது 39) எனத் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நபர், அவரது மைத்துனரைக் கட்டுத் துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், மூதூர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்