ஊடகத் திருடன் அகப்பட்டார்; பத்திரிகை ஆசிரியர்களுக்கு முறைப்பாடு

🕔 July 6, 2016

Thief - 0111– அஸ்ஹர் இப்றாஹிம் –

செய்திகளை களத்துக்குச் சென்று சேகரிக்காமல், மற்வரின் செய்திகளையும் படங்களையும் முகநூல்களிலும் – இணையத்தளங்களிலும் திருடி, பத்திரிகைகளுக்கு தங்கள் பெயர்களில் அனுப்பி வைக்கும் ஊடக திருடர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்தவகையில், இன்று புதன்கிழமை வெளியான விடிவெள்ளி பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில், சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்துக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வின் படமும் செய்தியும் மருதமுனையைச் சேர்ந்த பீ.எம்.எம்.ஏ.காதர் என்பவரின் பெயரில் வெளியாகியுள்ளன.

தன்னை சிரேஸ்ட ஊடகவியலாளர் என கூறிக் கொண்டு, 28 வருடங்கள் ஊடகத்துறையில் அனுபவம் பெற்றவர் என தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்டுள்ள – மருதமுனையைச் சேர்ந்த நிருபர் பீ.எம்.எம்.ஏ. காதர் என்கிற மேற்படி நிருபர், சாய்தமருதில் – குறித்த நிகழ்சி நடைபெற்ற இடத்துக்கு சமூகம் தராமல், மற்றவர்களின் படத்தினையும் செய்தியினையும் திருடி, தனது பெயரில் இவ்வாறு பத்திரிகையில் பிரசுரிக்கச் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்துக்கு புதிய சீருடை வழங்கும் மேற்படி நிகழ்வுக்கு செய்தி சேகரிப்பதற்காக, நானும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.வை.அமீர் என்னும் ஊடகவியலாளருமே சென்றிருந்தோம். காதர் என்பவரை இந்த நிகழ்வில் காணவேயில்லை.

ஆக, வீட்டிலிருந்து கொண்டு பேஸ்புக்கில் வெளியிடப்படும் படங்களையும் செய்திகளையும் திருடி – பத்திரிகைக்கு அனுப்பிச் சம்பாதிப்பதென்பது ஊடகத்துறைக்கே இழிவான ஒரு செயற்பாடாகும். இவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் இப்படி திருட்டில் ஈடுபடுகின்றவர்கள் உள்ளனர். அவர்களும் மிக விரைவில் வெளிக்காட்டப்படுவார்கள்.

விடிவெள்ளி பத்திரிகைக்கு திருடிய செய்தியை அனுப்பிது போதாதென்று, திகரனுக்கும் இச் செய்தியினை காதர் அனுப்பியிருந்தார். ஆனால் தினகரன் ஆசிரியர் பீடம் செய்தியை வெளியிடுவதற்கு முன்னர், காதர் என்பவர்  அந்த இடத்தில் செய்தி சேகரிக்க வந்தாரா என்று கேட்டு தெளிவு பெற்றது. அதனையடுத்து காதர் அங்கு செல்லவில்லை என்பதை அறிந்து கொண்ட தினகரன் பத்திரிகை ஆசிரியம் பீடமானது, குறித்த செய்தியினை, அந்த செய்தியை சேகரிப்பதற்காக களத்துக்குச் சென்ற நிருபரின் அடையாளத்தோடு பிரசுரித்தது.

இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளை, பல  நாட்களாக பொறுத்திருந்து பார்த்து விட்டு,  ஒருகட்டத்தில் பொறுமை மீறிய நிலையில்தான் இதை எழுதுகிறேன். இந்த திருட்டு நிருபரின் விடயமாக சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை செயலாளருக்கும் அறிவித்துள்ளேன்.Paper cut - 09

Comments

புதிது பேஸ்புக் பக்கம்