சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, சுனாமி அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட சர்வதேச நிதியுதவியில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ தனது அருகில் – முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஷ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களையும் வைத்துக் கொண்டு இந்த ஊழலை மேற்கொண்டார் என்றும் ரஞ்சன் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே தங்களை கைது செய்யுமாறு அச்சமின்றி கூறி வருகின்றனர்.
தவறிழைத்திருப்பார்களாயின் கட்சி பேதமின்றி அவர்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட -தாம் ஒரு போதும் அச்சமடையப் போவதில்லை என்றும், அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் ஹிருனிகா ஆகியோரின் குற்றங்கள் தொடர்பிலும் தாம் அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ ஒரு திருடன் எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.